சதா சரவணபவனின் தீட்டு வீடு நாடக நூல் , ஓம் நாதம் பல்திறன் வட்டு வெளியீடு

தமிழரியல் இணையத் தொலைக்காட்சி பணிப்பாளரும் மட்டக்களப்பு மக்கள் வங்கியின் மேனாள் உதவிப்பிராந்திய முகாமையாளருமான சதா சரவணபவனின் தீட்டு வீடு நாடக நூல் மற்றும் ஓம் நாதம் பல்திறன் வட்டு வெளியீடும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (16.10.2022) காலை 9.30 மணிக்கு வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.

எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் ஏற்பாட்டில் மூத்த எழுத்தாளர் தமிழறிஞர் கலாநிதி அகளங்கள் தலைமையில் மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இசை இளவல் ஜீவம் ஜோசப் அரங்கில் இவ் வெளியீட்டு நடைபெறவுள்ளது.

ஆசியுரையினை இராமகிருஷ்ண மிசன் மட்டக்களப்பு சுவாமி நீலமாதவானந்தஜீ மஹராஜ் வழங்க, அறிமுகவுரையினை எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் மேலாளரும் இலங்கை இளைஞர் பாராளுமன்ற மேனாள் உதவிப்பணிப்பாளருமான குழந்தை எழுத்தாளர் டாக்டர் ஓ.கே.குணநாதன் நிகழ்த்தவுள்ளார்.

நிகழ்வில், நூல் வெளியீடு, பல்திறன் வட்டு வெளியீடு, படைப்பாளி கௌரவம், அதிதிகளின் பாராட்டுரைகள், நூலாசிரியரின் மகிழ்வுரை ஆகியனவும் நடைபெறவுள்ளன.

முதன்மை அதிதிகளாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், மட்டக்களப்பு மாவட்ட மேனாள் அரசாங்க அதிபர்களான செ.புண்ணியமூர்த்தி, ம.உதயகுமார் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.