(அ . அச்சுதன்)
திருகோணமலை கல்வி வலய முத்துநகர், முஸ்லிம் வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா செவ்வாய்க்கிழமை (11) காலை 9.00 மணியளவில் பாடசாலை திறந்த வெளியில் இடம்பெற்றது. பாடசாலை அதிபர் எம்.எம். முஹைஸ் அவர்களது தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் பிரதம அதிதியாக திருகோணலை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சிறீதரன் அவர்களும் சிறப்பு அதிதியாக தம்பலகாமம் கோட்டக் கல்வி அதிகாரி எஸ். இராஜசுரேஷ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
கடந்த 2018.முதல் 2021 வரையான ஆண்டுகளில் கல்வி அடைவுகள் மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் சாதனை படைத்த மாணவர்களை கௌரவித்து அவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.