இளம் தலைவர்களை உருவாக்கப்போவதாக சந்திரிக்கா அம்மையார் தெரிவிப்பு !

கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபடாத படித்த இளம் தலைவர்களை உருவாக்கப்போவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

திருகோணமலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நாட்டை ஆள முடியாத அளவுக்கு தமக்கு வயதாகிவிட்டது என்றும் குறிப்பிட்டார்.

இந்நிலையில் உருவாக்கப்போகும் இளம் தலைவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்தார்.