கடலில் காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கையை துரிதப்படுத்த ஹரீஸ் எம்.பி நடவடிக்கை

(நூருல் ஹுதா உமர்)

கல்முனை பிரதேசத்திலிருந்து 11 நாட்களுக்கு முன்னர் மீன்பிடிப்பதற்காக கடலுக்கு தொழிலுக்கு சென்று காணாமல் போன நான்கு மீனவர்களை தேடும் நடவடிக்கையில் மீன்பிடி அமைச்சு மற்றும் திணைக்கள அதிகாரிகள், இலங்கை கடற்படை, இந்திய கரையோர காவல்படை என்பன ஈடுபட நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடி உள்ளதாக கல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், மீனவர்களின் பாதுகாப்பு நிலவரம் தொடர்பில் விளக்கி தேடுதல் பணியை முடுக்கிவிடுமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளதாகவும் இதனடிப்படையில் மீனவர்களை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதுடன் மீனவர்களை தேடி கண்டுபிடித்து பாதுகாப்பாக கரைக்கு அழைத்துவர மீன்பிடி அமைச்சு மற்றும் திணைக்கள அதிகாரிகள், இலங்கை கடற்படை என்பன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மேலும் தெரிவித்தார்.