சாக்கடைகளால் நிரப்பப்படும் நாடாளுமன்றம்

(ஹஸ்பர்)

நாடாளுமன்றத்தின் புனிதமானது சாக்கடையாகி விட்டதாக கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம். மஹ்தி தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று (05) வெளியிடப்பட்டஅறிக்கையிலேயே மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டுள்ளார்

மேலும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

மிகவும் புனிதமாக பேணப்பட வேண்டிய நாட்டின் உயரிய சபையான நாடாளுமன்றம் பஞ்ச மா பாதகக் காரர்களால் நிரம்பி வழிகின்றது.

ஏற்றுமதி, இறக்குமதி, கொள்வனவுகள், ஒப்பந்தங்கள், கட்சி தாவதல், ஆதரவு வழங்குதல் என அனைத்திலும் கொமிசனும் களவுகளும் முறைகேடுகளுமே அரங்கேறுகின்றன.

நாடாளுமன்ற விவாதங்களிலும் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதும் ஒருவரையொருவர் “ஹொரா” என்றும் “மினிவருவா” என்றும் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் ஆட்சிபீடம் ஏறினால் குற்றஞ்சாட்டப் பட்டவர்களுக்கு எதிராக எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்காமல் குற்றஞ் சாட்டியவர்களே பாதுகாக்கின்றார்கள்.

எனவே குற்றவாளிகளாக அடையாளப் படுத்தப் பட்டவர்களை எதிர்வரும் தேர்தல்களில் புறந்தள்ளி நல்லவர்களை தேர்வு செய்து இந்நாட்டை மீட்க ஒன்றுபட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.