குறுந்தூர்மலையில் சிங்களவர்களை குடியேற்றபோதவில்லை என்கின்றார் அமைச்சர் !

முல்லைத்தீவு குறுந்தூர்மலையில் இடம்பெறும் தொடர்ச்சியான நிகழ்வுகள் தவறான புரிதலால் இடம்பெற்றதாக நம்புவதாக புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

தொல்பொருள் பிரதேசத்திற்கு சொந்தமான காணிகளே தொல்பொருள் பிரதேசமாக பெயரிடப்படுமே தவிர அங்கு சிங்கள குடியேற்றம் நடைபெறாது என்றும் விதுர விக்கிரமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

தற்போது முன்னெடுக்கப்படும் தொன்மை பொருட்களை பாதுகாக்கும் நடவடிக்கை எதிர்காலத்திலும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

விகாரைகள் தேவாலயங்கள் சட்டம் தற்போது வரையறுக்கப்பட்டு வருவதாகவும் அது தொடர்பாக மகாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாடிய பின்னர் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.