மட்டு மண்ணில் சிறுவனே சிறுவர் இலக்கியத்தை படைத்த பெருமை

மட்டு மண்ணில் சிறுவனே சிறுவர் இலக்கியத்தை படைத்த பெருமை

மட்டக்களப்பு சிவானந்த தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் மே.தகிஸன் என்ற சிறுவர் படைப்பாளி வண்ண எண்ணங்கள் என்ற பாடல்கள் அடங்கிய சிறுவர் பாடல் நூலை அண்மையில் வெளியிட்டார்.

தனது 13வயது பிறந்ததினத்தில் தனது இல்லத்தில் வைத்து இந்நூலை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நூலின் முதற்பிரதி நூலாசிரியரிடம் இருந்து பேராசிரியர் செ.யோகராசா பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் சிவானந்த தேசிய பாடசாலையின் அதிபரும் பங்கேற்றியிருந்தார்.

சிறுவர் இலக்கியங்களை பெரியோர்கள் வெளியிட்டு வருகின்ற நிலையில் சிறுவர் இலக்கியத்தை சிறுவரே வெளியிட்டுள்ளமை எடுத்துக்காட்டத்தக்கது.

குறித்த படைப்பாளி எழுத்தாளரும், கவிஞருமான த.மேராவின் மகன் என்பதும் சிறப்புக்குரியது.