பன்முகத்தன்மையை மதிப்போம் வன்முறையை நிராகரிப்போம்!

பாலின அடிப்படையில் ஒருவருக்கொருவர் தீண்டுவதற்கும் ஒருவருக்கொருவர் பாகுபாடு காட்டுவதற்கும் ஒரு கட்சி என்ற ரீதியில் ஐக்கிய மக்கள் சக்தி எதிரானது என அக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமாகிய சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டார்.

சில சமயங்களில் மக்கள் மத்தியிலுள்ள அறிவின்மை, சிந்தனை தேக்கம் உள்ளிட்ட குறைபாடுகள் காரணமாகவே இவ்வாறான தவறான புரிதல்கள் ஏற்படுவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

ஒரு சமூகம் முன்னேற்றமடையும் பொழுது தொழில் நுட்பம், பொருளாதாரம் மடடுமன்றி அவர்களின் மனப்பாங்கிலும் முன்னேற்றமடைய வேண்டும் என்பதை அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

“தேசிய மறுசீரமைப்பும் எதிர்காலப் பயணமும்” என்ற வேலைத்திட்டத்தின் மற்றுமொரு கட்டமாக ஆண் பெண் சமூக நிலை மற்றும் LGBTIQ துறையில் கொள்கை உருவாக்கம் தொடர்பான சந்திப்பொன்று கடந்த செப்டம்பர் 19 ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற போதே எதிர்க்கட்சித் தலைவர் இக்கருத்துக்களை முன்வைத்தார்.

பாலுறவு மற்றும் ஆண் பெண் பால் நிலை பற்றிய நோக்கு தனிப்பட்ட ஒருவரின் கருத்தே தவிர பாலுறவு மற்றும் பால் நிலையை வைத்து அவர்களை பிரித்து நோக்குவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அவ்வாறே இன மத குலம் எதுவாக இருப்பினும் அனைத்து மனிதர்களையும் ஒரே சமமாக பார்க்க வேண்டும் என்றும் எல்லா வகையான பன்மைத்துவத்தையும் மதிக்க வேண்டும் என்றும் சஜித் பிரேமதாஸ அவர்கள் மேலும் சுட்டிக்காட்டினார்.