மலேஷியா சென்ற அமைச்சர் நஸீர் அஹமட் மலாக்கா மாநில ஆளுநருடன் சந்திப்பு

கொரியாவில் இடம்பெற்ற காலநிலை மாநாட்டில் கலந்து கொண்டு நாடு திரும்பும் வழியில், சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் மலேஷியாவுக்கு விஜயம் செய்தார்.

அங்கு மலாக்கா மாநில முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய ஆளுநரும் தனது நெருங்கிய நண்பருமான ரான்சிறி மொஹ்ட் அலிருஸ்தானை அமைச்சர் நஸீர் அஹமட் சந்தித்து கலந்துரையாடினார்.

மலாக்கா மாநிலத்தில் இலங்கையின் கலாசார நிலையம் ஒன்றை நிறுவுதல், இலங்கை மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புக்களை வழங்குதல், விவசாயிகளுக்குத் தேவையான உதவிகளை வழங்குதல் மற்றும் இலங்கையில் உல்லாசப்பயணத்துறையை விருத்தி செய்வது மலேசியாவின் ஒத்துழைப்பு பெறுவது தொடர்பிலும் இச்சந்திப்பில் மலாக்கா ஆளுநருடன் அமைச்சர் நஸீர் அஹமட் கலந்துரையாடினார்.