இலங்கையிலுள்ள பாகிஸ்தான் ஸ்தானிகராலயத்தினால் சாய்ந்தமருது அல்-சுபைதா அமைப்பிக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

(அஸ்ஹர் இப்றாஹிம்)

பாகிஸ்தான் அரசாங்கம் சார்பாக இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் பாறூக் புர்கி, சாய்ந்தமருது அல்-சுபைதா நலன்புரி அமைப்பிலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை அமைப்பின் தலைவரும் முன்னாள் பிரதேச செயலாளரும், பொதுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினருமான ஏ.எல்.ளம்.சலீமிடம் அண்மையில் கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் வைத்து வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் ஊடகச் செயலாளர் ஜிலானி கல்சூம் கலந்து கொண்டார்.