வெள்ளைமணல் நீரோட்டுமுனை கிராமத்தில் குடிநீர் தொகுதி கையளிக்கப்பு

(ஏ ஆர் எம் றிபாஸ் )

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபைக்கு உட்பட்ட குடாக்கரை பகுதில் தேசிய நீர் வளங்கள் வடிகாலமைப்பு சபையின் மூலம் விநியோகிக்கப்படுகின்ற நீர் விநியோகம் வேகமாக வருவது இல்லை என்றும் தினந்தோறும் நீர் விநியோகம் விநியோகிக்கப்படுவதில்லை என்றும் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வினை பெற்றுத் தருமாறும் அப்பகுதி சங்கங்கள் மற்றும் நீரோட்டுமுனை 3வது ஒழுங்கை பொதுமக்கள் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை உப தவிசாளர் முகமட் நௌபர் அவர்களிடம் எழுத்து மூலமான கோரிக்கையினையும் முன்வைத்திருந்தனர்.

இதற்கான நிரந்தர தீர்வினை பெற்றுக்கொடுக்கும் ஒரு அங்கமாக குடாக்கரை பிரதேசத்தில் நீரோட்டுமுனை 3வது ஒழுங்கையில் வாழும் பல மக்கள் குடிநீர் வசதியினை பெற்றுக் கொள்ளும் வகையில் ISRC Sri Lanka தொண்டு நிறுவனத்தின் அனுசரணையுடன் ஆழ்துளை குழாய்க் கிணறு அமைத்து குடிநீர் தொகுதி பட்டினமும் சூழலும் பிரதேச சபை உப தவிசாளர் முகமட் நௌபர் மற்றும் மூத்த சமூக சேவையாளர் ஜெய்னீன் அவர்களால் நேற்று மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

இதன் போது பயனாளிகளினால்குடிநீர் பெற்றுக் கொள்வதற்கு தாங்கள் பட்ட கஷ்டங்களையும்
தெரிவித்து இந்த குடிநீர் தொகுதியை அமைத்து தந்த ISRC Sri Lanka தொண்டு நிறுவனத்திற்கு இதயம் கனிந்த நன்றிகளையும் பயனாளிகள் தெரிவித்துக் கொண்டனர்.

இன் நிகழ்வில் வெள்ளைமணல் சனசமூக நிலைய தலைவர், நீரோட்டுமுனை கிராம அபிவிருத்தி சங்க தலைவர்,வெள்ளைமணல் கிராம அபிவிருத்தி சங்க செயளாலர், வெள்ளைமணல் விளையாட்டு கழக பொருளாளர், மற்றும் பயனாளிகள் பலர் கலந்து சிறப்பித்தனர்.