123ஆவது நாளாக நீடிக்கும் போராட்டம் – காலிமுகத்திடலில் பாதுகாப்பு அதிகரிப்பு

கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்த ஏற்பாடாகியுள்ள போராட்டத்தை முன்னிட்டு காலிமுகத்திடல் பிரதேசத்தில் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

காலிமுகத்திடல் போராட்டம் இன்று 123ஆவது நாளாக நீடிக்கிறது போதிலும் கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில் குறைவான போராட்டக்காரகளே அங்கு உள்ளனர்.

இதேவேளை, இன்றைய தினத்தை தேசிய எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தி நாடளாவிய ரீதியில் போராட்டங்களை நடத்துவதற்கு தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் தீர்மானித்துள்ளது.