அனைத்து வாகன சட்ட விதிகளும் வழமைபோன்று இடம்பெறும் -பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

இன்று (திங்கட்கிழமை) முதல் அனைத்து வாகன சட்ட விதிகளும் வழமைபோன்று இடம்பெறும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.

மேலும் அபராதம் கட்டுவதற்கான சீட்டுக்களை விநியோகித்தல், மதுபோதையில் வாகன ஓட்டுனர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை என்பன மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

தற்சமயம் நாடு வழமையான நிலைக்குத் திரும்பியுள்ள நிலையில் பெருமளவிலான வாகனங்கள் சேவையில் ஈடுபடுகின்றதோடு வேலைக்காக செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார் .