ம.தெ.எ.பற்று பிரதேச சபை உறுப்பினர் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் அறைக்குள் வைத்து தாக்குதல்.(Video)

 

(மலரவன்) களுவாஞ்சிகுடி நாகேந்திரன் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் பெறுவதற்காக சென்ற களுதாவளை பிரதேச சபை உறுப்பினர் தாக்கப்பட்டு களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

பிரதேச சபையின் மகிழூர் வட்டார உறுப்பினர் க.உத்தமன் அவர்கள் களுவாஞ்சிகுடி நாகேந்திரன் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு பெற்றோல் பெறுவதற்காக சென்ற போது குறித்த எரிபொருள் நிலையத்தில் கடமைபுரியும் ஊழியர்களுக்கும் உறுப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரன்பாடு காரணமாக தாக்கப்பட்டதாகவும் எரிபொருள் நிரப்ப நிலைய ஊழியர்கள் களுவாஞ்சிகுடி பொலிசாரினால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரனை மேற்கொள்ளப்படுகின்றது.