சாவகச்சேரி பிரதேசசபையில் தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் ஐவர் பதவி விலகல்

சாவகச்சேரி நிருபர்
சாவகச்சேரி பிரதேசசபையின் தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் ஐவர் பிரதேசசபை உறுப்பினர் பதவியில் இருந்து தாமாக விலகியிருப்பதாக பிரதேசசபைத் தவிசாளர் க.வாமதேவன் அறிவித்துள்ளார்.

21/07 வியாழக்கிழமை சாவகச்சேரிப் பிரதேசசபையில் இடம்பெற்ற மாதாந்த அமர்வின் போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
சாவகச்சேரிப் பிரதேசசபை உறுப்பினர்களான மதன்ராஜ்,செல்வரூபன், சண்முகசுந்தரம்,ஜானகி மற்றும் மகேந்திரராணி ஆகியோர் கட்சி சார்ந்த கொள்கை அளவில் தாமாக பதவி விலகியிருப்பதாக தேர்தல் ஆணையாளர் எமக்கு அறியத்தந்துள்ளார்.
இவர்கள் ஐவரும் இதுவரை எமது சபை நடவடிக்கைகளுக்கு பல பங்களிப்பினை ஆற்றியுள்ளனர். குறிப்பாக கொரோனா இடர் வேளையில் தம்மாலான பங்களிப்பை மேற்கொண்டிருந்தனர்.
அவர்களுக்கு சபை சார்பாக நன்றியினையும்-பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.என்றார்.