பசிலும் பறக்கின்றார்.

முன்னாள் நிதியமைச்சரும் மொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று (12) நாட்டை விட்டு வெளியேறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறவுள்ளார் என்பதை உறுதிப்படுத்தும் விமான நிலைய தகவல் தற்போது ஊடகங்களுக்கு வெளியாகியுள்ளது.

பரிமாற்றத் தகவலின்படி, அவர் இன்று EK 649 விமானத்தில் நாட்டை விட்டு துபாய் செல்கிறார், மேலும் துபாயில் இருந்து EK 231 விமானத்தில் அமெரிக்கா செல்கிறார். முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இலங்கை மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் குடியுரிமை பெற்றவர்.