கிழக்கு பல்கலைக்கழக வேந்தருக்கு ஒளிக்கல்லூரியால் கௌரவிப்பு

கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு புதிய வேந்தராக ஜனாதிபதியினால்  நியமிக்கப்பட்ட பேராசிரியர் மா.செல்வராசாவை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு நேற்று(18) சனிக்கிழமை முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) இடம்பெற்றது.

ஒளிக்கல்லூரி அமைப்பின் ஏற்பாட்டில், ஒளிக்கல்லூரியின் அதிபர் மு.நமசிவாயம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பேராசிரியர் செ.யோகராசா, வெல்லவூர் கோபால், ஓய்வுநிலை கோட்டக்கல்விப்பணிப்பாளர் தே.சுப்பிரமணியம், ஓய்வு நிலை கொத்தணி அதிபர் சி.சந்திரசேகரம் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டிருந்தனர்.
ஓய்வு நிலை ஆசிரியர் மத்திய நிலைய முகாமையாளர் சி.குருபரன்,  ஓய்வு நிலை அதிபர்களான மா.வன்னியசிங்கம், வே.மகேசரெத்தினம், அதிபர் மா.சத்தியநாயகம் ஆகியோர் வேந்தர் மா.செல்வராசாவின் சமூக, கல்வி, ஆன்மிக பணிகள் தொடர்பிலான உரைகளை வழங்கியிருந்தனர்.
ஒளிக்கல்லூரி அமைப்பின் ஸ்தாபகராக செயற்பட்டு படுவான்கரை கல்வி வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்தவர் என்பதனை இதன்போது யாவரும் கூறிப்பிட்டு இருந்தனர்.
இதன்போது வேந்தரை பாராட்டி பிரதேச பொது அமைப்புக்களினாலும், தனிப்பட்ட நபர்களினால் வாழ்த்துப்பாக்களும் வழங்கி வைக்கப்பட்டமையுடன் மாலை அணிவிக்கப்பட்டு பொன்னாடையும் போர்த்தி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.