புதிய இராணுவ தளபதி 1 ஆம் திகதி முதல் நியமனம்!

மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே எதிர்வரும் 1 ஆம் திகதி முதல் புதிய இராணுவத் தளபதியாக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் இராணுவ தளபதி பதவியில் இருந்து விலகவுள்ளார்.

இதை அடுத்து எதிர்வரும் ஜுன் மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் ஜெனரல் ஷவேந்திர சில்வா பாதுகாப்பு படைகளின் புதிய பிரதானியாக கடமைகளைப் பொறுப்பேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.