பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இராஜினாமா

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜகத் அல்விஸ் இன்று (23) மாலை தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இராஜினாமா கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தேசபந்து தென்னகோன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் சமர்ப்பித்ததன் பின்னர் தனது இராஜினாமாவைச் சமர்ப்பித்துள்ளதாகத் தெரியவருகிறது.

தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை விட்டு விலகுவதாக செயலாளர் தமக்கு அறிவித்ததாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்..