மீண்டும் நாடாளுமன்றுக்கு வருமாறு சந்திரிகா குமாரதுங்கவுக்கு ஏ.எல்.எம் அத்தாவுல்லாஹ் நாடாளுமன்றத்தில் பகிரங்க அழைப்பு !

(மாளிகைக்காடு நிருபர்)

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவையும் நாடாளுமன்றுக்கு அழைத்து வரவேண்டும் என்று தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம் அத்தாவுல்லாஹ் பாராளுமன்றில் யோசனையை முன்வைத்துள்ளார்.
இந்த நாட்டை அபிவிருத்தி செய்தது மாத்திரமல்ல, நாட்டை நாசமாக்கியதாக குற்றம் சுமத்தப்படும் பலர் இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்ரசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போன்றோர் நாடாளுமன்றில் தற்போது உறுப்பினர்களாக உள்ளனர். எனினும் சந்திரிகா குமாரதுங்க மாத்திரமே நாடாளுமன்றில் இல்லை. எனவே, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேசியப்பட்டியலின் ஒருவர் சுரேன் ராகவனாவது பதவி விலகி சந்திரிகா குமாரதுங்கவை நாடாளுமன்றுக்குள் அழைத்து வரவேண்டும்.

அத்துடன், இதுவரையில் அரச சேவையில் அங்கம் வகித்த அலுவலகர்களையும் அழைத்து வந்து நாட்டை கட்டியெழுப்பும் திட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டும் என்று அத்தாவுல்லாஹ் மேலும் யோசனை வெளியிட்டார்.