துவிச்சக்கரவண்டி வழங்கி வைப்பு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட ஏறாவூர் பற்று மேற்கு கோட்ட பாடசாலைகளைச்சேர்ந்த மாணவர்களுக்கு அண்மையில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளிலிருந்து, 2021ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றி மாவட்ட மட்ட வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்ற மூன்று மாணவர்களுக்கே இத்துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதனை சிறுவர் நடவடிக்கை லங்கா நிறுவனத்தினர் வழங்கியிருந்தனர்.
கோட்டக்கல்விப் பணிப்பாளர் அ.ஜெயக்குமணன் தலைமையில், கரடியநாறு இந்து வித்தியாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் ஆரம்பக் கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் மு. மாணிக்கப்போடி ஆரம்ப கல்வி ஆசிரிய ஆலோசகர்களான ரவிச்சந்திரன்,திருமதி ஆ. தேவதாசன், மு.கோகுலதீபன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.