திருமலை கடலில் மிதந்த நிலையில் ஆணொருவரின் சடலமொன்று மீட்பு

(ரவ்பீக் பாயிஸ்)

திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இலிங்க நகர் கடற்பகுதியில் கடலில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக துறைமுக பொலிசார் தெரிவித்தனர்

குறித்த கடல் பரப்பில் இன்றைய தினம் மீன் படிப்பதற்காக மீனவர்கள் கடலுக்கு சென்ற நிலையில் குறித்த சடலம் மிதப்பதை அவதானித்து பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிசார் மற்றும் மீனவர்கள் இணைந்து குறித்த சடலத்தை கரைக்கு கொண்டு வந்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் திருகோணமலை இலிங்க நகர் பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட சண்முகநாதன் கருணாகரன் (வயது-49) எனவும் தெரியவருகிறது.

குறித்த சடலத்தை திருகோணமலை மாவட்ட பதில் நீதவான் தர்ஷினி அண்ணதுரை முன்னிலையில் குடும்பத்தினர் அடையாளப்படுத்தினர.

மேலும் குறித்த சடலம் தொடர்பில் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறும் இதன்போது நீதவான் கட்டளையிட்டார்.

குறித்த சடலம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது