இலங்கைக்கு நிதி உதவிகளை வழங்கும் சர்வதேச மன்றம் ஒன்றை உருவாக்குமாறு பரிந்துரை!

இலங்கைக்கு நிதி உதவிகளை வழங்கும் சர்வதேச மன்றம் ஒன்றை உருவாக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினை ஐக்கிய அமெரிக்கா, ஐப்பான், இந்திய மற்றும் சீனா ஆகிய நாடுகளின் இராஜதந்திரிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

அவர்கள் இதன்போது பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், சில முக்கிய விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போதே இலங்கைக்கு நிதி உதவிகளை வழங்கும் சர்வதேச மன்றம் ஒன்றை உருவாக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.