(ரவ்பீக் பாயிஸ்)
திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாச்சிக்குடா பிரதேசத்தில் தீப்பற்றிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர்
நேற்றைய தினம் மின்சாரம் தடைபட்ட நேரத்தில் குறித்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்
மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது
திருகோணமலை சீனக்குடா நாச்சிக்குடா பிரதேசத்தைச் சேர்ந்த முகம்மது அபுசாலி பசீலா (வயது – 80) என்பவர் குறித்த வீட்டில் தனிமையில் வசித்து வந்ததாகவும் மின்சாரம் தடைபட்ட வேலையில் மண்ணெண்ணெய் குப்பி விளக்கு ஒன்று பயன்படுத்தி வந்ததாகவும் தெரியவந்துள்ளது
நேற்றைய இரவு முதல் குறித்த பெண்ணின் நடமாட்டம் இல்லாததையடுத்து அயலவர்கள் குறித்த வீட்டை பார்வையிட வந்ததையடுத்து குறித்த நபர் தீக்காயங்களுடன் சடலமா கண்டு பொலிசாருக்கு தகவல் வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் நேற்று இரவு வேலை மின்சாரம் தடைப்பட்ட வேலையில் குறித்த மண்ணெண்ணை குப்பி விளக்கு கவிழ்ந்ததில் படுக்கையில் தீப்பற்றி அதை அடுத்து குறித்த பெண்ணின் உடம்பில் தீ பரவி இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வேளியிட்டுள்ளனர்.
மேலும் குறித்த சடலம் வீட்டின் அறையில் கட்டிலில் இருந்ததாகவும் திருகோணமலை தடயவியல் பொலிசாரின் உதவியுடன் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்ததுடன் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது