தனது தொகுதியில் கூட வெற்றி பெறாத ஒருவர் நாட்டின் பிரதமர். பா.உ சுமந்திரனும் அதிருப்தி.

தனது தொகுதியில் கூட வெற்றி பெறாத ஒருவரை ஜனாதிபதி கோட்டாபய பிரதமராக நியமித்துள்ளார் என ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தீர்மானம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

இந்திய ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்

“ஜனாதிபதி முற்றாக சட்டபூர்வமான தன்மையை இழந்துவிட்டார், மக்கள் அவர் வீட்டிற்கு செல்ல வேண்டும் என விரும்புகிறார்கள், மேலும் அவர் மீது அதிருப்தியை வெளிப்படுத்தும் பிரேரணைக்கு பாராளுமன்றம் விரைவில் வாக்களிக்கும். திரு. விக்கிரமசிங்கவிற்கு ஆரம்பத்திலிருந்தே தற்போதைய பாராளுமன்றத்தில் சட்டபூர்வத்தன்மை இல்லை. அவர் தனது தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என பா.உ எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.