தாக்குதலுக்கு திட்டமிட்ட அரசியல்வாதிகளுக்கு மக்கள் பிரதிநிதிகளாக இருக்க தார்மீக உரிமை இல்லை

அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் மீதான தாக்குதலை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரித்த அரசியல் தலைவர்களுக்கு மக்களின் இறையாண்மையை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகளாக இருக்க தார்மீக உரிமை இல்லை என மாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும்  அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளார்கள்.

மல்வத்து பீடத்தின் பிரதம பீடாதிபதி அதி வணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல அவர்கள் கலந்து கொண்டார்.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

“நாட்டில் எழுந்துள்ள சமூக, அரசியல், பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வு காணும் வகையில் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் மீது நடத்தப்படும் வன்முறைத் தாக்குதல்கள் ஜனநாயகத்துக்கும் மனித குலத்துக்கும் எதிரானது. இந்த கேவலமான நடவடிக்கையை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரித்த அரசியல் உயரதிகாரிகளுக்கு மக்களின் இறையாண்மையை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் பிரதிநிதிகளாக இருக்க தார்மீக உரிமை இல்லை என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

நாட்டின் ஒட்டு மொத்த மக்களின் உயிர்கள் மற்றும் உடமைகளைப் பாதுகாக்கவும், கருத்துச் சுதந்திர உரிமையைப் பாதுகாக்கவும் அரசமைப்புச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர்கள்  ஆட்சியாளர்கள்.

பேராசை மற்றும் ஒழுக்கக்கேடான அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் பெயரால் நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களுக்கு காரணமான அனைவருக்கும் எதிராக சிறிலங்கா காவல்துறை உட்பட சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல், சமூக, பொருளாதார நெருக்கடிகள் காரணமாக நாமும் பல்வேறு தரப்பினரும் கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட பிரேரணைகள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தவில்லை என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

இந்த முக்கியமான தருணத்தில் இந்த நெருக்கடியைத் தீர்ப்பதில் அனைத்து பொறுப்புள்ள கட்சிகள் மற்றும் குடிமக்கள் விழிப்புடனும், விவேகத்துடனும், பொறுமையுடனும் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.