அவசரகால சட்டத்தை எதிர்த்து திருமலையில் ஆர்ப்பாட்டம்

(ரவ்பீக் பாயிஸ்)

நாட்டில் அவசரகால சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதியினால் அமல்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்திட்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலையில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலை பிரதான கடற்கரைக்கு முன்பாக அமைந்துள்ள காந்தி சுற்று வட்டத்திற்கு முன்பாக தீப்பந்தம் ஏந்தியவாறு குறித்த ஆர்ப்பாட்டம் தேசிய மக்கள் முன்னணியினர் னால் முன்னெடுக்கப்பட்டது.

அவசரகால சட்டத்தை உடன் நீக்கு ஒடுக்குமுறையை உடன் நிறுத்து எனும் தொனிப்பொருளில் தீப்பந்தம் ஏற்றியவாறு அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் அருண் ஹேமச்சந்திர

நாட்டில் இறக்குமதி முற்று முழுதாக தடைபட்டுள்ள நிலையில் அத்தியாவசிய பொருளகளுக்கான தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் நாட்டின் நிதி அமைச்சர் அலி சப்ரி அவர்கள் நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது என வெளிப்படையாக தெரிவித்துள்ள நிலையில்

இவ்வாறு நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புமாறும் ஊழல் மிக்க அரசாங்கம் வீடு செல்ல வேண்டும் எனவும் பொதுமக்கள் வீதிக்கு இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் அரசாங்கம் தமது பொறுப்புகளை தட்டிக் கழிப்பது கவலையளிப்பதாக திருகோணமலை மாவட்ட தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளர்

நாளுக்கு நாள் பொதுமக்கள் இவ்வாறு வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு அரசுக்கு எதிரான அமைதியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில் அரசாங்கம் போராட்டக்காரர்கள் மீது தொடர்ந்தும் வன்முறையில் ஈடுபடுவது ஏற்றுக்கொள்ள முடியாது எனவும்

எந்த ஒரு அளவீடும் இல்லாமல் கண்ணீர்ப்புகை விசிருதல் மற்றுமல்லாது ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கப்படுகின்றமை என்பன நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது எனவும் இதனைத் தவிர்த்து ஆர்ப்பாட்டக்காரர்களை தடுக்கும் நோக்கில் அவசரகால சட்டத்தை அமுல்படுத்தி இன்னமும் இந்த மக்களை நோகடிக்கும் செயற்பாட்டில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதை ஒருபோதும் தேசிய மக்கள் முன்னணி என்ற வகையில் அனுமதிக்க முடியாது எனவும் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்

மேலும் அரசாங்கம் மக்களின் கருத்துகளுக்கு செவிமடுக்காமல் போலி நாடகங்கள் நடித்து தலைகளையும், கதிரைகளையும் மாற்றி தமது ஆட்சி பீடத்தை தக்க வைத்துக் கொள்கின்று மக்களை ஏமாற்றும் செயல் எனவும் கடந்த நாட்களில் பிரதி சபாநாயகர் ராஜினாமா செய்ததாக கூறி பொய்யாக மக்களை திருப்திப்படுத்துவதற்காக ஏமாற்றி மீண்டும் பிரதி சபாநாயகராக குறித்த நபர் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடப்பட்டுள்ளதாக விடயம் எனவும்

இவ்வாறு மக்களின் கண்களை கட்டி அரசாங்கத்தை தக்கவைக்கும் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாமெனவும் மக்களின் ஆணைக்கு மதிப்பளித்து உடன் பதவி விலக வேண்டும் எனவும் இவ்வாறு நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டத்தை உடன் நீக்க வேண்டும் எனவும் இதன்போது கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.