புதியதோர் ஆரம்பம் வேண்டும்; வத்திக்கானிலிருந்து நாடு திரும்பிய கர்தினால் தெரிவிப்பு

எமது நாட்டின் சட்டம் ஜனாதிபதியும் பிரதமரும் கையாடல் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளமை துரதிஷ்டவசமானது என தெரிவித்துள்ள , பேராயர் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, சட்டமானது அவர்களுக்கு மேலே காணப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

புனித பாப்பரசரின் விசேட அழைப்பின் பேரில் வத்திக்கானுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த அவர், தனது விஜயத்தை முடித்துக்கொண்டு இன்று (4) காலை நாட்டை வந்தடைந்த போதே, விமானநிலையத்தில் வைத்து மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், உடனடியாக புதிய ஆரம்பம் ஒன்றுக்கு இடமளிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டின் பொறுப்புள்ள தலைவர்கள் நாட்டுக்காக சிந்தித்து செயற்பட பழகிக் கொள்ள வேண்டும் என தெரிவித்த அவர், அதற்காக நடிப்பதில் அர்த்தம் இல்லை. சரியான முறையில் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்றார்.