சேவைப்பிரமாணம் கோரி மகஜர் கையளிப்பு

சேவைப்பிரமாணம் கோரி கிராம உத்தியோகத்தர்கள் இன்று (4) ஜனாதிபதியின் செயலாளரிடம் மகஜர் கையளித்தனர்.

கிராம உத்தியோகத்தர் பதவி ஆரம்பித்த காலத்திலிருந்து தனியான சம்பளப் படிநிலையுடன் சேவைப்பிரமாணம் இல்லாத நிலையில் தமது கடமைகளை மேற்கொள்கின்ற போது ஏற்படுகின்ற குறைபாடுகளையும் சுட்டிக்காட்டி அவற்றை நிவர்த்தி செய்ய கோரியே கொழும்பு ரயில் நிலையம் முன்பாக ஆரம்பித்த நடைபயணம் ஜனாதிபதி செயலகம் வரை சென்றிருந்தனர். அந்த இடத்திலேயே குறித்த மகஜரை ஜனாதிபதியின் செயலாளர் வருகை தந்து பெற்றுக்கொண்டார்.

சகல மாவட்டங்களிலும் இருந்து கிராம உத்தியோகத்தர்கள் இந்த நடைபயண பேரணியில் கலந்து கொண்டதுடன் சுகயீன விடுமுறை அறிவிப்பு செய்து கடமையிலிருந்தும் விலகியிருந்தனர்.