கடும் பொருளாதார சூழ்நிலையில் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ள மக்களுக்கு உதவிட நிதியுதவி வழங்கிடுங்கள் – தமிழக முதலமைச்சர் வேண்டுகோள்.

(வாஸ் கூஞ்ஞ)

இலங்கையில் தற்பொழுது நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ள மக்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து உணவு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று தமிழ்நாட்டு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இவ் பொருட்களை இலங்கைக்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள இதற்கான ஒன்றிய அரசின் அனுமதியை எதிர்பார்த்துக் கொண்டிருப்தாகவும் முதலமைச்சரால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இதற்கான ஒன்றிய அரசின் அனுமதி தற்பொழுது கிடைக்கப்பபெற்றுள்ளதாகவும் முதலமைச்சரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே இதன் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் இருந்து 40 ஆயிரம் தொன் அரிசி, 500 தொன் பால் பவுடர் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த சூழ்நிலையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில் நல்லெண்ணம் கொண்ட அனைவரும் தம்மால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டிய தருணம் இது எனவும்

எனவே மனிதாபிமான அடிப்படையில் இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட நன்கொடைகள் வழங்கிடுமாறும் தமிழக முதலமைச்சர் அப் பகுதி மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.