இன்று ரணசிங்க பிரேமதாசவின் 29ஆவது நினைவு தினம்

நாட்டின் இரண்டாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியான அமரர் ரணசிங்க பிரேமதாசவின் 29 ஆவது நினைவு தினம் இன்றாகும்.

இதனை முன்னிட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை ) கொழும்பு புதுக்கடை பகுதியிலுள்ள அவரது உருவச்சிலைக்கு அருகாமையில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஹேமா பிரேமதாச, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பலர் நிகழ்விடத்திற்கு வந்திருந்தமை குறிப்பிடதக்கது .

இதேவேளை கொழும்பு மாநகர சபை உறுப்பினராக அரசியலில் பிரவேசித்து, நாட்டின் இரண்டாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக படிப்படியாக உயர்வு கண்ட ரணசிங்க பிரேமதாச ஒப்பற்ற மக்கள் தலைவராக இன்றும் போற்றப்படுகிறார்.