மன்னாரில் தொழிலாளர் தினம் கலைகட்டாத நிலையில் பள்ளிமுனையில் கவனயீர்ப்பு போராட்டம்.

(வாஸ் கூஞ்ஞ)

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு முன்னைய காலங்களில் கிராமங்கள் தோறும் விளையாட்டுப் போட்டிகள் கலை நிகழ்வுகள் இடம்பெறுகின்றபோதும் இம் முறை மன்னார் மாவட்டம் இவ் நிகழ்வுகளால் பெரிதாக கலைகட்டாத நிலையில் காணப்பட்டது. அத்துடன் பள்ளிமுனை கிராமத்தில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்நாள் கத்தோலிக்க மக்களின் தொழிலாளர்களின் பாதுகாவலராம் புனித சூசையப்பர் பெருவிழாவாக காணப்படுவதால் காலையில் கத்தோலிக்க தேவாலயங்களில் இவ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டதுடன் கடலோரங்களில் உள்ள கிராமங்களில் புனித சூசையப்பர் திருச்சுரூபம் கடலுக்கு எடுத்துச் சென்று கடல் ஆசீர்வதிக்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன.

இது இவ்வாரிருக்க சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மன்னார் நகரை அண்டிய பள்ளிமுனை கிராம மக்கள் பள்ளிமுனை கடற்கரைக்கு அருகில் ஞாயிற்று கிழமை (01.05.2022) காலை 8 மணியளவில் அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தpருந்தனர்.

தொழிலாளர்களின் உரிமை மதிக்கப்படவேண்டும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும்இ இலங்கையில் தீர்கமுடியாமல் காணப்படும் இனப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு எட்டப்படவேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பள்ளிமுனை மக்கள் இவ் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

குறித்த போராட்டத்தில் பள்ளிமுனை லூசியா ஆலய பங்குத்தந்தை அருட்சகோதரிகள் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஆளுநுனுழு தலைவர் ஜாட்சன் பிகிறாடோ மன்னார் நகர சபை உப தலைவர் ஜான்ஸன் உட்பட நூற்றுக்கானக்காண பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.

ஆட்சியாளர்களே அப்பாவி பொது மக்களின் வாழ்க்கையை நசுக்காதீர்கள், குழந்தைகளுக்கான பால்மா எங்கே, தொழிலாளர்களின் பட்டினிநிலைக்கு பதில் சொல்இ பயங்கரவாத தடைசட்டத்தை நீக்கு, விலை உயர்வு உனக்கு என்ன விலையாட்டா, கடற்றொழிலாளர்களுக்கு எரிபொருளை வழங்க ஆவணை செய், திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை நிறுத்து, மன்னார் வளை குடாவில் கடல்வளங்களை அழிக்காதே, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவுகள் எங்கே போன்ற பல்வேறு உணர்சி ரீதியாக எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு மக்கள் கவனயீர்ப்பு போராட்டதை முன்னெடுத்தpருந்ததும் குறிப்பிடத்தக்கது.