மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குபட்பட்ட மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் ஓந்தாச்சிமடத்தில் சனிக்கிழமை(07) இடம்பெற்ற வாகன விபத்தில் அரச உத்தியோகஸ்த்தர் ஒருவர் உயிரிழதுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட எருவில் சமூர்த்தி வங்கியில் காசாளராக கடைமையாற்றும் களுவாஞ்சிகுடியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான நாகராசா விஜேந்திரன் (வயது 58) எனும் அரச உத்தியோகஸ்தரே உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு பக்கமிருந்து கல்முனை பக்கம் நோக்கி பணித்த மோட்டார் சைக்கிள் மீது அதே திசையில் பின்னால் சென்ற சொகுசு ரக ஜீப் வண்டி ஒன்று மோதியதாலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளதாக அதனை அவ்விடத்தில் நின்று அவதானித்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இஸ்த்தலத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் பொலிசார் விசாரணைகளை முன்னநெடுத்துள்ளனர். இவ்விபத்துச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.