அவசர கால நிலை – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை

மக்களின் அடிப்படை உரிமைகளான கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம், பிரசுர சுதந்திரம் மற்றும் அமைதியாக ஒன்றுகூடும் சுதந்திரம் என்பனவற்றை உறுதிப்படுத்துவதற்காக அவசரகால பிரகடனத்தை மீளப்பெறுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது .

அமைதியான போராட்டங்கள் மற்றும் கருத்து வேறுபாடுகளை நசுக்கவோ அல்லது தன்னிச்சையான கைதுகள் மற்றும் காவலில் வைக்கவோ அவசரகாலச் சட்டம் பயன்படுத்தப்படக்கூடாது என்றும் அச்சங்கம் தெரிவித்துள்ளது .

இதேவேளை போராட்டங்கள் வன்முறையாக இருக்கக்கூடாது என்றும், எல்லா நேரங்களிலும் அமைதியாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதோடு அவசரகாலச் சட்டத்தை ஏன் பிரகடனப்படுத்தினார் என்பதற்கான காரணங்களை மக்களுக்கு உடனடியாக விளக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது