தனது மதத்திற்கே துரோகம் செய்த ஒரு துரோகி எனது எண்பத்தேழு வயதான அம்மாவையும்அவமானப்படுத்துகிறார் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தெரிவிப்பு.

நேற்றும் இன்றும் இரண்டு நாட்களாக இந்த சபையையும் நாட்டையும் தவறாக வழிநடத்தி இங்கு அமர்ந்துகொண்டிருப்பவர்கள் எண்பத்தேழு வயதான தாயாரை அவதூறாகப் பேசி வருகிறார்கள் என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

களனி ஆற்றை இரண்டாக பிளந்து நாகராஜா வருவதாக கூறிய கும்பல், கட்டுக்கதையை விதைத்து நாட்டிற்குபாணியை கொண்டு வந்து பருக்கிய கும்பல்,தகனமா அடக்கமா போன்ற பிரச்சினைகள் வந்த போது தனதுமதத்தைக் காட்டிக் கொடுத்த துரோகி, கொபல்ஸ் கோட்பாட்டை பயன்படுத்திய வன்னம் அப்பட்டமானபொய்களை சமூகமயமாக்கி வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

தன் மீது சேறுபூசும் எந்தவொரு தாக்குதலயோ அல்லது பொய்யை சகித்துக்கொள்ளும் சக்தி தமக்குஇருப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,அந்தப் பொய்களுக்காக அல்லது அவமானங்களுக்காகநாட்டின் இருநூற்றி இருபது இலட்சம் மக்களுடன் தான் முன்நிற்பதைத் தவிர்க்க முடியாது எனவும் அவர்தெரிவித்தார்.