நாடு முழுவதும் தீப்பற்றி எரியும் போது அரசாங்கம் தூங்கிக் கொண்டிருக்கிறது – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

முழு நாடும் இப்போது பேரழிவு நிலையில் உள்ளதாகவும்,மக்களின் அழுத்தங்கள் தீவிரமடைந்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இவ்வளவும் நடக்கும் போதும் அரசாங்கம் மௌனம்காத்துவருவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் இன்றைய (05) பாராளுமன்ற அமர்வில் கட்டளை நியதிகள்சட்டம் 27/2 கீழ் அரசாங்கத்திடம் 18 கேள்விகளை முன்வைத்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர்மேற்கண்டவாறு தெரிவித்தார்.