மக்களே தீர்மானம் எடுக்க வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிப்பு.

இன்று யார் குற்றம் சாட்டினாலும் மக்களை அணுகுவதன் மூலம் மட்டுமே பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் எனவும், அரசாங்கம் திரிபுபடுத்தியதை சரிசெய்யும் வகையிலான பணி நடந்து வருவதாகவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, டொலர், ரூபா, சதம் சார்ந்தே நாட்டைக் கட்டியெழுப்பும் அனைத்தும் தீர்மானிக்கப்படுவதாகவும் என அவர் தெரிவித்தார்.

இந்நாட்டில் இனவாதத்தையும், மதவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் ஏற்படுத்தியவர்களுடன் எக்காரணம் கொண்டும் அரசாங்கங்களை அமைக்கவோ அல்லது அதில் பங்குபற்றவோ மாட்டோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அனைத்து ராஜபக்சக்களும் பதவி விலக வேண்டும் எனவும், நியமிக்கப்படவுள்ள இடைக்கால அரசாங்கத்திற்கு எதிர்கட்சியாக அமர்ந்து நேர்மறை அம்சங்களில் கண்காணிப்பு மட்டத்தில் சரியானதை ஆதரிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் மே 6 ஆம் திகதி நாடு தழுவிய ஹர்த்தாலை நடத்துகிறது என்பதோடு,அது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்றை நேற்று மாலை (04) நடத்தியது.

இந்நிகழ்வில் முன்னணி தொழிற்சங்க தலைவர்கள் உட்பட பெருந்திரளான பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.