ஆர்ப்பாட்டத்துக்கு பஸ்கள் இலவசம்

அரசாங்கத்துக்கு எதிராக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டக்கார்களுக்கு பஸ்களை இலவசமாக வழங்குவதற்கு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

20 முதல் 25 கிலோமீற்றர் தூரத்துக்கு பஸ்கள் இலவசமாக இயக்கப்படும் என்று தெரிவித்த சங்கத்தின் தலைவர் தலைவர் கெமுனு விஜேரத்ன, டீசல் கட்டணத்தை மட்டுமே வசூலிக்கக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

எனினும், ஆர்ப்பாட்டங்களால் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு ஆளாகக் கூடாது என்றும் வீதிகளைத் தடை செய்யப்படக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எந்த அரசியல் கட்சிக்கும், இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் பஸ்கள் வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.