ஜனாதிபதிக்கு கூறி பயனில்லை. அவர்கள் செய்வது ஏமாற்றுவேலை. ரஞ்சனுக்கான போராட்டத்தை வீதிக்கு கொண்டுவருவோம் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தெரிவிப்பு.

ரஞ்சன் ராமநாயக்க ஒரு போதும் சிறையில் இருக்க வேண்டிய மனிதரல்ல எனவும், அவருக்கு நீதி பெற்றுத் தரப்படும் என ஜனாதிபதி பல தடவைகள் கூறிய போதிலும், இதுவரையில் ஏமாற்றமே வழங்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அவரை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரையும் அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இனி ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை செய்யுமாறுக் கோருவதற்கு பதிலாக அவரது விடுதலைக்கான போராட்டம் தீவிரப்படுத்தப்படும் எனவும் மேலும் தெரிவித்தார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவை இன்று (03) காலை நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னரே எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்தார்.