டக்ளஸ் அடங்கலாக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் அமைச்சரவை உபகுழு!

ரசியலமைப்பு வரைபு தொடர்பாக விசேட நிபுணர்கள் குழு வழங்கிய அறிக்கை குறித்து ஆராய்வதற்கு அமைச்சர் பீரிஸ் தலைமையில் அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தலைமையிலான குறித்த குழுவில் தினேஷ் குணவர்தன, டக்ளஸ் தேவானந்தா, ரமேஷ் பத்திரன மற்றும் அலி சப்ரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.