மட்டு மேற்கு, காஞ்சிரங்குடாவில் இரத்தான முகாம் : விரும்பியவர்கள் வழங்க முடியும்.

மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட காஞ்சிரங்குடா காமாட்சி வித்தியாலயத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை(05) காலை இரத்தான நிகழ்வொன்று நடைபெறவுள்ளது.

காஞ்சிரங்குடா கிராமசேவையாளர் பிரிவிற்குட்பட்ட இளைஞர்கள் ஒன்றிணைந்து இவ் இரத்ததான நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு குருதியை கொடையாக வழங்கவுள்ளனர்.

இதன்போது, குருதியை கொடையாக வழங்கவிரும்பும் அனைவரும் அன்றைய தினம் பங்கெடுத்து வழங்க முடியும் எனவும் ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டனர்.