பொண்டுகள்சேனை கிராமத்திற்கு ராமகிருஷ்ண மிஷனின் பாரிய உதவி!

(காரைதீவு சகா)

மட்டக்களப்பில் மிகவும் பின்தங்கிய பொண்டுகள்சேனை கிராமத்திற்கு இராமகிருஷ்ண மிஷன் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஆரம்பித்து பல உதவிகளையும் செய்துள்ளது.

வங்கத்தின் சிங்கம் வீரத்துறவி சுவாமி சுவாமி விவேகானந்தரின் இலங்கை விஜயத்தின் 125வது வருட நிறைவையொட்டி இடம் பெற்றுவரும் நிகழ்ச்சி தொடரின் ஓர் அங்கமாக இந்த உதவி வழங்கப்பட்டது .

அந்த கிராமத்து கணபதி வித்தியாலயத்திற்கு தேவையான குடிநீர் திட்டம் மற்றும் குழாய் கிணற்றுடன் கூடிய தண்ணீர் தாங்கி ,கம்பியூட்டர் ,மின் விசிறி ,நீர் வடிகட்டி தாங்கி, மாணவர்களுக்கான அப்பியாச கொப்பிகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் போன்றன வழங்கி வைக்கப்பட்டன.