முதலைக்குடா பாலையடி பிள்ளையார் கண்ணகை அம்மன் ஆலயத்தில் 1008சங்குகளாலான அபிஷேகம்

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முதலைக்குடா ஸ்ரீ பாலையடி பிள்ளையார் கண்ணகை அம்மன் ஆலயத்தில் இன்று(29) வெள்ளிக்கிழமை 1008 சங்குகளாலான சங்காபிஷேகம் இடம்பெற்றது.

கடந்த 6ம் திகதி கும்பாவிசேகம் இடம்பெற்றதை தொடர்ந்து தொடர்ச்சியாக மண்டலாபிஷேக பூசையும் நடைபெற்றது.

சங்காபிஷேகத்தினை சிறப்பித்து கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட பக்தர்களினால் பாற்குடம் பவனியாக எடுத்துவரப்பட்டு மூல மூர்த்திக்கும்,  பரிவார தெய்வங்களுக்கும் பாலாபிஷேகமும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு. சச்சிதானந்த குருக்கள் தலைமையில் இப்பூசை நிகழ்வுகள் நடைபெற்றன.