ரம்புக்கனை துப்பாக்கிச்சூட்டுக்கு எதிராக ஐ.தே.க. சத்தியாகிரகப் போராட்டம்!

ரம்புக்கனையில் அண்மையில் இடம்பெற்ற போராட்டத்தின்போது உயிரிழந்த சமிந்த லக்ஷானின் படுகொலைக்கு எதிராக ஐக்கியத் தேசியக் கட்சி ரம்புக்கனையில் சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்தியது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் பலர் இந்த சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

ரம்புக்கனை பிரதேசத்தில் அண்மையில் 12 மணித்தியாலங்களுக்கும் மேலாக ரம்புக்கனை ரயில் கடவையை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதனையடுத்து, போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகித்தனர்.

எனினும், அவர்கள் கலைந்து செல்லாததால் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.