பசிலின் செருப்பு சூப்பை குடித்த டீல்காரர்கள் எங்களை குற்றம் சாட்டுகிறார்கள்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் மாவனல்லையில் பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி வழங்கினார்.

69 இலட்சம், 68 இலட்சம் வாக்குகளைக் கொண்ட ஒரு ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தில் 145 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சகிதம் அதிகாரங்கள் மற்றும் 2/3 பெரும்பான்மையை கொடுத்து உருவாக்கிய அரசாங்கம், நாடு வீழ்ந்துள்ள நேரத்தில் அந்த மோசடியாளர்களுடன் எமக்கு எந்த ஒப்பந்தமும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இன்று உலக காக்கை தினம் என்பதோடு,பிற காக்கைகளால் ஊதிப்பெருத்த பங்கைப் பெற்ற பசில் ராஜபக்ஷவின் செருப்பு சூப் குடித்த குழுக்கள் தன் மீதும்,ஐக்கிய மக்கள் சக்திக்கும் டீல் செய்து கொண்டதாக குற்றம் சாட்டுவதாகவும் நாட்டை சீரழித்த திருடர்களுடன் ஐக்கிய மக்கள் சக்தியோ அல்லது சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியோ அத்தகைய டீல்களை போடாது எனவும் அவர் தெரிவித்தார்.

அடக்குமுறை மிக்க கொடுங்கோல் அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த “சுதந்திரத்திற்கான போராட்டம்” ஐக்கிய சக்தி பாத யாத்திரையின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் தலைமையில் இன்று(27) மாவனெல்லை நகரில் ஆரம்பமாகியது.இந்த பாத யாத்திரையில் இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

நண்பர்களே, அரசாங்கத்துடன் நாங்கள் எப்படி (டீல்) ஒப்பந்தம் செய்வது. இந்நாட்டு இளைஞர்கள், அரசியல் தலையீடு இன்றி இலட்சக்கணக்கானவர்கள், உயிர்களை தியாகம் செய்து காலி முகத்திடலில் போராடும் போது இந்த திருடர்களுடன் நாம் ஒப்பந்தம் (டீல்) செய்வோமா? என்ன ஒரு நகைச்சுவை? இவர்கள் கூறுவது, அரசாங்கத்திற்குள் இருக்கும் நெருக்கடியையாகும். ஒரு பகுதியினர் ஜனாதிபதியை செல்லுமாறுக் கூறுகின்றனர். மற்றொரு தரப்பினர் ஜனாதிபதியை பதவி விலக வேண்டாம் எனக் கூறுகின்றனர்.இன்னும் சிலர் பிரதமரை பதவி விலக வேண்டாம் என்கிறார்கள்.பிரதமர் வெளியேறுமாறுக் கூறினார்.இந்த திருடர்கள் இருக்கும்,மோசடிக்கு நாங்கள் ஆதரவளிக்காதபோது எங்களுக்கும் ஒப்பந்தம் (டீல்) இருப்பதாகக் கூறுகின்றனர். எங்களுடைய டீல் (ஒப்பந்தம்) இந்த நாட்டில் வாழும் 22 மில்லியன் மக்களுடனே இருக்கின்றன.மாறாக, இந்த திருடர்களுடன் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.