சீனாவிடமிருந்து மற்றுமொரு கடனுதவியைப் பெற திட்டம் – நாலக கொடஹேவா

சீனாவினால் மற்றுமொரு கடனுதவி வழங்க முன்மொழியப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து மேலும் தெரிவித்த அமைச்சர், இலங்கையில் தற்போது நிலவும் கடன் நெருக்கடிக்கு தீர்வாக கடனை மறுசீரமைப்பது சிக்கலாக இருப்பதால் சீனா இந்த முடிவை எடுக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

சீனா ஏற்கனவே உலகின் பல்வேறு நாடுகளுக்கு கடனை வழங்கியுள்ள நிலையில், ஒரு நாட்டிற்கு மட்டும் கடனை மறுசீரமைப்பது நெருக்கடியை ஏற்படுத்தும் என்று சீனா கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.