நிலையான சமாதானத்தை கட்டியெழுப்புதல் தொடர்பான செயலமர்வு!!

(மட்டக்களப்பு எஸ்.எஸ்.அமிர்தகழியான்) 

இலங்கையில் நிலையான சமாதானத்தை கட்டியெழுப்புதல், அந்த சமாதானத்தை அடைவதற்கான சவால்கள், நிலையான சமாதானத்திற்கான மும்மொழிவுகள் தொடர்பான செயலமர்வொன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட கரித்தாஸ் எகெட் நிறுவனத்தின் உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் நிறுவன இயக்குனர் அருட்பணி ஏ.ஜேசுதாசன் அடிகளாரின் தலைமையில் நடைபெற்ற ஒருநாள் செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல் சமய உறுப்பினர்கள், அரச உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இலங்கையில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் வகையில் பல நல்லிணக்க சமூக செயல்பாடுகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் இலங்கையில் நிலையான சமாதானத்தை கட்டியெழுப்புதல், அந்த சமாதானத்தை அடைவதற்கான சவால்கள், நிலையான சமாதானத்திற்கான மும்மொழிவுகள் இலங்கையில் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான புரிந்துணர்வுகளை எவ்வாறு புரிந்து கொள்ள வைத்தல் தொடர்பாக தெளிவுபடுத்தும் ஒருநாள் செயலமர்வே இவ்வாரு முன்னெடுக்கப்பட்டது.

குறித்த செயலமர்விற்கு வளவாளர்களாக கிழக்குப்பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் அருட்பணி நவரெட்ணம் நவாஜீ அடிகளார், காத்தான்குடி பிஸ்மி கல்வி நிறுவன தவிசாளர் எம்.பி.எம் .பிர்தொவஸ் நளினி ஆகியோர் கலந்துகொண்டு சிறந்த முறையில் வளவாண்மையாற்றியிருந்தனர்.

இதன்போது செயலமர்வில் பங்குபற்றியவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.