மைத்திரியையும் அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் இயக்குநர் நிலாந்த ஜெயவர்த்தனவையும் கைதுசெய்ய திட்டம்?

70க்கும் அதிகமானவர்களை பலிகொண்ட உயிர்த்தஞாயிறு தாக்குதலை தடுக்க தவறியமைக்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் இயக்குநர் நிலாந்த ஜெயவர்த்தனவையும் கைதுசெய்வது தொடர்பில் சிஐடியினர் சட்டமா அதிபர் திணைக்களத்துடன் ஆராய்ந்தனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை அரசாங்கத்தின் மீது கடும் தாக்கத்தை செலுத்தும் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்ட 60 பேருடன் வத்திக்கானிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குதாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் தகலல்கள் வெளியாகின்றன.

இவ்வாறான சூழ்நிலையில் சர்வதேச நடவடிக்கைகளை தடுப்பதற்காக முன்னாள் ஜனாதிபதியையும் தேசிய புலனாய்வு துறையின் முன்னாள் இயக்குநரையும் தாக்குதலை தவறினார்கள் என்ற அடிப்படையில் கைதுசெய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.