இடைக்கால அரசாங்கம் குறித்து நேற்று முதல் பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்

இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிப்பது குறித்து நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளுடன் நேற்று முதல் குழு அடிப்படையில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளன.

நடைமுறை பிரச்சினைக்கு இடைக்கால அரசாங்கத்தின் ஊடாகவே தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.

தவறான அரசியல், பொருளாதார கொள்கையினால் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் வீதிக்கிறங்கி போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக கூறினார்.

ஆகவே தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு இடைக்கால அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதை தொடர்ந்து மாற்று தீர்வு எதும் கிடையாது என்றும் குறிப்பிட்டார்.

அத்தோடு புதிய அரசியலமைப்பு திருத்தம், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஜனாதிபதியுடன் பேசியதாகவும் கூறினார்.

மேலும் இடைக்கால அரசாங்கத்தில் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் நீக்கம் குறித்து அதிக கவனம் செலுத்தப்படும் என நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.