இந்தியாவிலிருந்து அரிசி இலங்கையை வந்தடைந்தது.

சிங்கள, தமிழ் புத்தாண்டை இலக்காகக் கொண்டு இந்திய கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 11,000 தொன் அரிசி, 40,000 மெற்றிக் தொன் அரிசியை ஏற்றிய கப்பல் இன்று (12) பிற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அரச பல்நோக்கு கூட்டுத்தாபனத்தின் தலைவர் திரு.யோகா பெரேரா உட்பட வர்த்தக அமைச்சின் பிரதிநிதிகள் குழுவிடம் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதிநிதிகள் உத்தியோகபூர்வமாக அரிசியை கையளித்தனர்.